96 Movie Best Dialogue Lyrics in Tamil. 96 Movie Love Dialogue Lyrics in Tamil. 96 Movie Singakutty, Nassar, Jaanu Punch Dialogues.
96 Movie Best Dialogue Lyrics in Tamil. 96 Movie Love Dialogue Lyrics in Tamil. 96 Movie Singakutty, Nassar, Jaanu Punch Dialogues.
96 Movie Ambala Nattu Kattai Dialogue
உன்னை மாதிரி பசங்களை
பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்குமே
எப்படி Miss பண்ணுனாங்க
டேய் நீ ஒரு ஆம்பள நாட்டு கட்டை டா
ஏன் உன்-ட யாரும் சொன்னதில்லையா
96 Movie Singakutty Dialogue Lyrics
மூனு வருசத்துக்கு அப்பறமா
அவனை பாத்தேன்
அந்த School பையன்
மோகம்-லாம் போயீ
தாடி மீசை-னு சும்மா
சிங்க குட்டி மாதிரி வந்து நின்னான்
எனக்காக ஜானுக்காக
96 Movie Marriage Dialogue Lyrics
அன்னைக்கு தேதிக்கு என்னை தவிர
உன்னை ஒரு மூனு பேரு
Love பண்ணிட்டு இருந்தாங்க
அப்பறம் Collage Annual Day-க்கு
First Time பொடவை கட்டிட்டு வந்த
பொடவை அவுந்திருமோனு பயம் ஒரு பக்கம்
ஆன எல்லாரும் உன்னையே
பாக்குறாங்களோனு வெக்கம் ஒரு பக்கம்
எப்படி இருந்த தெரியுமா
அதுக்கு அப்பறம் உன் கல்யாணத்துல தான்
உன்னை நான் பொடவை-ல பாத்தேன்
நீ நெனச்ச மாதிரி உன்
கல்யாணத்துக்கு நான் வந்தேன் ஜானு
96 Movie Flashback Dialogue Lyrics
ஜானுன எனக்கு அவ்வளோ இஷ்டம்
அது அவளுக்கும் தெரியும்
நான் இன்னைவரைக்கும்
90 Percent கு மேல Attendance வச்சதுக்கு
அதான் காரணம் அவதான் காரணம்
கிட்டத்தட்ட எழுத்துக்கூட்டி
படிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து
ஒன்னாத்தான் படிக்கிறோம்
அன்னைலிருந்து இன்னைவரைக்கும்
அவ என்ன சொன்னாலும் கேப்பேன்
அவளும் ஏதாவது வேணும்னா
என்னைத்தான் கேட்பாள்
என்னைக்காவது வீட்டுல திட்டுனாங்க
இல்லை Mark கொறைஞ்சுருச்சுனு
ஏதாவது நெனைச்சு உம்முனு இருப்பேன்
யாரும் கண்டுக்காதப்பா
ஜானு மட்டும் கிட்ட வந்து
என்னடானுந்தான் கேட்பா போதும்
கொப்புரானே அந்த ஒத்த வார்த்தை
பத்து யானைக்கு சமம்
நெஞ்செல்லாம் ஏதோ பண்ணிடும்
சும்மா போற நாலு பையலுகள
இழுத்து போட்டு அடிச்சு
பொளக்கனும்னு போல இருக்கும்
ஜானு எனக்கு
இன்னதுன்லாம் சொல்ல தெரியாது
ஆனா கோயிலுக்கு போன
ஒன்னே ஒன்னுதான் வேண்டிப்பேன்
புள்ளையாரப்பா ஜானுவ எப்பவும்
என் கண்ணுக்கு எட்டுற தூரத்துலையே
வைப்பான்றது மட்டும்தான்
96 Movie Jannu Dialogue Lyrics
ராம் நீ கெளம்பிடயா
சொல்லு ஜானு ஏதாவது வேணுமா
இல்லை எங்க இருக்க
ஜானு...!!
ரொம்ப தூரம் போய்டியா
ரொம்ப தூரம் போய்டியா ராம்
உன்னை எங்க விட்டேனோ
அங்கேயே தான் இருக்கேன்
96 Movie Nassar Dialogue Lyrics
தேட வேண்டாம்
உன்னறிவிப்பு இன்றி வரும்
அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்
காதல்...!!!
காதல் ஒருநாள் உங்களையும் வந்தடையும்
அதை அள்ளி அணைத்துக் கொள்ளுங்கள்
அன்பாக பார்த்துக்கொள்ளுங்கள்
காதல் தங்கும், காதல் தயங்கும்
காதல் சிரிக்கும், காதல் இனிக்கும்
காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும், காதல் குழம்பும்
காதல் ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும், காதல் பிரியும்
கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்
காத்திருங்கள்
ஒருவேளை காதல் திரும்பினால்
தூரத்தில் தயங்கி நின்றால்
அருகில் செல்லுங்கள்
அன்புடன் பேசுங்கள்
போதும் காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்...!!