Mookuthi Amman Dialogue Lyrics in Tamil. Mookuthi Amman Movie Punch Dialogue Lyrics in Tamil. Trailer, Climax Dialogues Lyrics.
Mookuthi Amman Dialogue Lyrics in Tamil. Mookuthi Amman Movie Punch Dialogue Lyrics in Tamil. Trailer, Climax Dialogues Lyrics.
RJ Balaji Praying Dialogue Lyrics
என்னால முடியல
Tried-டா இருக்கு
பதினோரு வருஷம் ஆச்சு
ஏன் அப்பா வீட்டைவிட்டு ஓடிப்போனாரு
ஓடிப்போன ஒரு அப்பாவ நம்பி ஏன் அம்மா
இத்தனை கொழந்தைகளை பெத்துக்கிட்டாங்க
நான் அவுங்கள நல்லாத்தான் பாத்துக்கிறேன்
ஆனா சில நேரத்துல
என்ன பண்ணுறது-னு தெரியல
பயமா இருக்கு
எனக்கு ஒரு அண்ணனோ
அக்காவோ இருந்திருந்தா
ஏன் எனக்கு மூணு தங்கச்சி
ஏன் தேவா படிக்கல?
ஏன் எந்த பொண்ணுக்கும் என்னை புடிக்கல?
இந்த மாதிரி ஏன் ஏன்-னு
அவ்வளோ கேள்வி இருக்கு
ஆனா யார்கிட்ட கேக்குறதுனு தெரியல
உலகத்துல எவ்வளவோ பிரச்சனை இருக்கு
இதெல்லாம் ஒரு பிரச்சனையானு
இருக்கும்ல உனக்கு
ஆனா நான் சாதாரண மனுஷன்
எனக்கு என் குடும்பம் அம்மா தாத்தா
என் தங்கச்சிங்கதான் உலகம்
அவுங்க சந்தோசம்தான் எனக்கு முக்கியம்
அவுங்க நல்லா இருக்கணும்னா
மொட்டை அடிக்கணும்னா ஒருத்தன்
மொட்டை அடிச்சுக்கிட்டேன்
அழகு குத்திக்கிட்டேன்
தீ மிதிச்சாச்சு
அந்த கோயிலுக்கு போ
அந்த பரிகாரம் பண்ணு
இந்த கோயிலுக்கு போ
இந்த பரிகாரம் பண்ணுனா
எல்லாத்தையும் பண்ணியாச்சு
இனிமேல் என்ன பண்றதுனு தெரியல
தீடீர்னு பாத்தா பாக்குற
எடத்துலயெல்லாம் நீ தெரியுற
என்கிட்ட ஏதோ சொல்ல
வரென்ற மாதிரி தோணுச்சு
அந்த பாட்டி சொன்னங்க
குலதெய்வம் கோவமா இருக்கும்னு
உனக்கு கோவம் வர அளவுக்கு
நாங்க என்ன பண்ணுனோம்னு தெரியல
ஆனா நானும் எங்க குடும்பமும்
ஏதாவது தப்பு பண்ணிருந்தோம்னா
எங்களை மன்னிச்சுரு
ஏதாவது Help பண்ணு Please
வேற யார்க்கிட்ட கேக்குறதுனு தெரியல
நீதானா குலதெய்வம் Please
Mookuthi Amman Guarantee Dialogue
பத்து ரூபாய்க்கு Bulb வாங்கினாலே
ஆறு மாசம் எரியுங்கிற
Warranty கொடுக்கிறாங்க
இந்த கல்லு தயத்துக்கு சேத்து
ஒரு மூனு லட்சம் வாங்கிடுவீங்கள
அவ்வளோ காசு கொடுத்த
அவருக்கு Guarantee இல்லைனா
அது எப்படி Correct-ஆ இருக்கும்
Mookuthi Amman Climax Dialogue
உன் காலு கவட்டை விரிச்சு
அதை மூக்கு ஓட்டைல நொழைச்சு
உன் மண்டை ஓட்டை பிரிச்சு
அதை காதுக்குள்ள திணிச்சு
உன் மூளை Juice-அ Dinner-கு
குடிச்சிடுவாடா அம்மன்
Mookuthi Amman Pakthi Payam Dialogue
என்ன நெனைச்சிட்டிருக்க
எல்லாரும் பக்தில
சாமி கும்பிட வரங்கனா
பயத்துல கும்பிடுறாங்க
அய்யய்யோ தப்பு
பண்ணுறமேன்ற பயத்த விட
தப்பு வெளியில தெரிஞ்சு
மாட்டிக்க கூடாதுன்ற
பயம் தான் அதிகம்
பக்தி நம்பிக்கைல இருந்து
பயமா மாறி ரொம்ப நாள் ஆச்சு
Mookuthi Amman Pavam Dialogue Lyrics
இதை செஞ்சா பாவம்
அதை செஞ்சா பாவம்
இந்த பாவத்துக்கு அந்த பரிகாரம்
அந்த பாவத்துக்கு இந்த தண்டனைனு
எதுக்கெடுத்தாலும் பயம் பயம் பயம்னு
பயத்தை வச்சுதான
உங்க கடவுள் ஓட்டிட்டு இருக்காரு
பணக்காரங்களை சீக்கிரம் பாப்பாரு
ஏழைகள Queue-ல நிக்க வைப்பாரு
கொலை கொள்ளை பண்ணவங்கள கூட
VIP தரிசனம் கொடுப்பாரு
கொஞ்சம் காசு கொடுத்த போதும்
பாவத்தை Easy-ஆ மன்னிச்சுருவாருள
இதான உங்க கடவுள்
போதும் உங்கள மாதிரி ஆளுங்க
கடவுள காப்பாத்துனது போதும்
அவர அவரே காப்பாத்திக்கிறுவாரு
Mookuthi Amman Trailer Dialogue Lyrics
நீங்க எல்லாம் நம்பளேல
நீங்க வேணும்னா ஏதாவது
கேளுங்க நான் தரேன்
Mookuthi Amman End Credit Dialogue
என் முன்னாடி வந்த மாதிரி
கடவுள் உங்க முன்னாடி வரும்போது
கேக்குறதுகுக்கு பெரிய List
எல்லாம் Prepare பண்ணாதிங்க
அது எதுவுமே நம்மளுக்கு பத்தாது
கொஞ்சோண்டு நம்பிக்கையும்
தைரியமும் இருந்தாலே போதும்
நம்ம பிரச்சனைய நம்மளே பாத்துக்கலாம்
கடவுள் எப்படி நம்ம முன்னடியெல்லாம்
வருவாங்கனு நெனச்சிராதீங்க
கண்டிப்பா வருவாங்க
Because We Are All God Chosen Child's