Sathuranga Vettai Dialogue Lyrics in Tamil. Sathuranga Vettai Movie Mass Dialogue Lyrics. Sathuranga Vettai Money, Chicken 65 Dialogues
Sathuranga Vettai Dialogue Lyrics in Tamil. Sathuranga Vettai Movie Mass Dialogue Lyrics. Sathuranga Vettai Money, Chicken 65 Dialogues.
Sathuranga Vettai Mass Dialogue Lyrics
உன்னை ஏமாத்துனவன
நீ எதிரியா நெனைக்காதடா
ஒருவகையில அவன் உனக்கு குரு
ஏன்னா அவன் உனக்கு வாழ்றதுக்கு
ஒரு தந்திரம் சொல்லிக்கொடுத்து இருக்கான்
நல்லவனா வாழ்ந்த செத்தை பிறகு
சொர்க்கத்துக்கு போகலாம்
கெட்டவனா வாழ்ந்த வாழும் போதே
சொர்க்கத்துல வாழலாம்
ஏமாறது ஏமாத்துறது
எல்லாம் ரொம்ப இயற்கையானது
ஒரு பொய் சொன்னா
அதுல உண்மையும் கலந்து இருக்கனும்
அப்பத்தான் அது பொய்னு தெரியாது
நான் சொல்லுற
ஒவ்வொரு பொய்லையும்
ஒரு உண்மை இருக்கும்
ஒவ்வொரு உண்மைலையும்
ஒரு பொய் இருக்கும்
கோழி மேல பரிதாபம் பட்டா
Chicken 65 சாப்பட முடியாது
ஒருத்தனை ஏமாத்தனும்னா
அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்க கூடாது
அவனோட ஆசைய தூண்டனும்
குற்ற உணர்ச்சி இல்லாம பண்ணுற
எதுவுமே தப்பில்லை
Money Is Always Ultimate
Sathuranga Vettai Money Dialogue Lyrics
இந்த உலகத்துல
பணம் சம்பாரிக்கிற மாதிரி
Easy-ஆன வேலை வேற எதுவும் இல்லை
அதுக்கு நீங்க ஒன்னே
ஒன்னுதான் பண்ணனும்
உங்களை மாதிரியே நெறைய
பணம் சம்பாதிக்கனும்ற பேராசை உள்ள
ஒருவனை கண்டு புடிக்கணும்
அவ்வளோதான்
காசு இல்லாதவன் உடம்ப வச்சு கத்துக்கோ
காசு இருக்கிறவன் உடம்ப வச்சு சம்பாரி
நாம்ம உழைச்சா பணக்காரன் ஆக முடியாது
மத்தவங்க உழைப்ப எடுத்துக்கிட்டா தான்
பணக்காரன் ஆகமுடியும்
பணம் இருந்த என்னை
வேணா பண்ணலாம்னா
அந்த பணத்தை சம்பாதிக்க
நான் ஏன் என்னை
வேணும்னாலும் பண்ணக்கூடாது
பணம்தான் என் மொழி
பணம்தான் என் சாதி
பணம்தான் என் மதம்
Sathuranga Vettai Punch Dialogue Lyrics
இந்த சமூகம்
நமக்கு என்ன பண்ணுச்சோ
அதைத்தான் நாம்ம திருப்பி
இந்த சமூகத்துக்கு பண்ணுறோம்
நீங்க எங்க என்னை
அடிக்கலாம் கொல்லலாம்
ஆனா தண்டிக்க முடியாது சார்
ஏன்னா நான் ஏழையும் இல்லை
முட்டாளும் இல்லை
முதலாளி-னு ஒருத்தன் இருந்தாத்தான்
தொழிலாளி இருக்க முடியும் என்றது
முதலாளித்துவம்....
தொழிலாளி-னு ஒருத்தன் இருந்தாத்தான்
முதலாளி இருக்க முடியும் என்றது
Communism...
சட்டத்தோட ஓட்டைல புகுந்து
பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு
அதுல ஒரு வழிய நான் சொல்லித்தரேன்
இல்லாத இருக்குனு நம்ப வைக்கப்போறோம்
நம்பிக்கைய விதைக்கப்போறோம்
விதைச்சதை பணமா
அறுவடை பண்ணப்போறோம்
Sathuranga Vettai Rice Pulling Dialogue Lyrics
கோயில சிலைகளை பிரசித்தை
பண்ணுறோம் வணங்குறோம்
அதோட அபிஷேக நீர் நோய் தீர்க்கும்
தின்னாலே வியாதி வராது-னு
கேள்வி பட்டுருக்கோம்
நம்மள சுத்தி எப்பவுமே
ஏதாவது ஒரு Vibration இருந்துகிட்டே இருக்கும்
அது Positive Vibration-ஆ இருந்தா
மனசுக்கும் நல்லது உடம்புக்கும் நல்லது
Negative Vibration-ஆ இருந்தா காலி
இந்த Vibration-லாம்
செயற்கையா கூட உருவாக்க முடியும்
பில்லி சூனியம் இதெல்லாம்
Negative Vibration
நீங்க ஓம்-னு ஒரு மந்திர
கேள்வி பட்டுருப்பிங்க
அது ஓம் கிடையாது அவும்
நம்ம வாயில இருந்து
நாக்கோட உதவி இல்லாம வர சத்தம்
இந்த மந்திரத்தை சொல்லும் பொழுதும்
ஒரு கெட்ட வார்த்தை சொல்லும் பொழுதும்
நம்ம உடம்புல ஒரு மாறுபட்ட Reaction
ஏற்படுறத நீங்க கவனிக்கலாம்
ஏன்னா நம்ம வாயில இருந்து
வர வார்த்தைகள் காத்துல கரைஞ்சு
அப்படியேதான் இருக்கும்
அந்த சத்தங்களை
தியானத்தின் மூலமா க்ரணிச்சு
சில சக்திமிக்க ஒலிகளை சேர்த்து
உருவானதுதான் மந்திரங்கள்
அந்த மந்திரங்களை தினம் ஓதி ஓதி
சாதாரண கள்ள கூட
சக்திமிக்க சிலைகளா மாத்துறோம்
ப்ரசித்ததை பண்ணுறோம்
அது மக்களுக்கு நன்மை விளைவிக்குது
தினம் கோயில ஆயிரக்கணக்கான முறை
உச்சரிக்கும் மந்திரங்கள் சக்தியாக மாறி
கோயில் கலசத்தை போய் சேரும்
பல கோடிமுறை பரவி பரவி
அந்த சக்தி சக்திபீடமாக மாறும் பொழுது
அதை இடி மின்னல் தாக்கி
அது மேலும் சக்தியாகி
சக்தி பிரளயமாகவே மாறிடும்
அப்படிப்பட்ட சக்தி
ஒருத்தனுக்கு கிடைக்கும்போது
அவனை எந்த கொம்பனாலும்
அசைக்க முடியாது
அவனோட வளர்ச்சியை யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது
சக்ரவர்தியா வாழலாம்