Katrathu Tamil Movie Dialogue Lyrics in Tamil. Katrathu Tamil Movie Punch Dialogue Lyrics. Katrathu Tamil Love, Life Fact Dialogues.
Katrathu Tamil Movie Dialogue Lyrics in Tamil. Katrathu Tamil Movie Punch Dialogue Lyrics. Katrathu Tamil Love, Life Fact Dialogues.
Katrathu Tamil Dialogue Lyrics
பத்து வருசத்துக்கு முன்னடி
குறைந்தபட்ச சம்பளம் 2000 ரூபாய்
அதிகப்பட்ச சம்பளம்
20000 ரூபாய் இருந்திருக்கும்
இப்போ குறைந்தபட்ச சம்பளம்
அதே 2000 ரூபாய் தான்
ஆனா அதிகபட்ச சம்பளம்
2, 3-னு லட்சத்துல போயிக்கிட்டு இருக்கு
இந்த ஊரு 2 லட்சம் ரூபாய்
வாங்குறவனுக்கு ஏத்த மாதிரி
மாறிக்கிட்டு இருக்கு Sir
இந்த ஊர்ல இருக்குறவன்
ரெண்டே ரெண்டு பேர் தான் Sir
ஒருத்தன் Spencer Plaza உள்ள இருக்குறவன்
ஒருத்தன் Spencer Plaza வெளிய இருக்குறவன்
சத்யம் தியேட்டர்-கு உள்ள இருக்குறவன்
சத்யம் தியேட்டர்-கு வெளிய இருக்குறவன்
ATM Center-கு உள்ள இருக்குறவன்
ATM Center-கு வெளிய இருக்குறவன்
வெளியை இருக்கறவன் நம்ம ஆளு
Sir Credit Card வாங்கிட்டீங்களா Sir
Debit Card வாங்கிட்டீங்களா Sir
Home Loan வாங்கிட்டீங்களா Sir
அதை தூக்கி இதுல போடீங்களா Sir
இதை தூக்கி அதுல போடீங்களா Sir
Sir Sir Sir Sir Sir பாவம் Sir
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனி உண்டாகும் என்றான் பாரதி
அதான் சார் நடக்குது இங்க
2 லட்சம் ரூபாய் வாங்குறானுங்க
3 லட்சம் ரூபாய் வாங்குறானுங்க
Car-அ வாங்குறானுங்க
வீட வாங்குறானுங்க
Reben Glass-அ போடுறானுங்க
Shoes-அ போடுறானுங்க
Scent -அ போடுறானுங்க
Distrub ஆகுமா ஆகாதா Sir
தமிழ் படிச்சவன் எல்லாம்
ஏதோ சாதுவானான் அப்புராணி
அப்படி எல்லாம் நினைச்சுராதிங்க
சும்மா தாடி வச்சுக்கிட்டு
சோடா பூட்டி கண்ணாடி போட்டுக்கிட்டு
ஜோல்னா பைய மாட்டிகிட்டு
கவிதை சொல்லுவான்னு
டோக்கன் மாதிரி எல்லாம் நினைச்சுராதிங்க
ஏன்னா தமிழ் ஒருவனை
சந்தைப்படுத்துவது மட்டும் அல்ல
தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும்
கையில காசு இல்லாம
காதலிக்குறது ரொம்ப கொடுமை Sir
ஆனா என்ன என் ஆனந்தி
தனுக்கு பிடிச்சதையே
நிலைமையை புரிஞ்சுகிட்டு
பிடிக்கலைனு சொல்லிட்டு போற
ஏழைகளோட காதல் முழுக்க
இப்படிப்பட்ட சந்தோசங்கள்
நிறைஞ்சு இருக்குன்னு
அன்னைக்கு நான் கண்டு புடிச்சேன்
அங்க தெரியுற அந்த மரமும்
பக்கத்துல இப்படி உக்காந்துட்டு இருக்குற
இந்த ஆனந்தியும் கிட்டத்தட்ட ஒன்னு Sir
யார் யாரோ எங்கிருந்தோ வந்து
இந்த மரத்தை தொட்டு கும்பிட்டா
முன்னூறு வருசத்துக்கு முன்னாடி
இருந்த அந்த சாமியாரை
தொட்டுரலாம்னு நினைக்குறானாக
இன்னைக்கு இவ என் பக்கத்துல
உக்கார்ந்துட்டு இருக்கா
இவ தோள் என் தோள் மேலப்படுது
இவ மூச்சு காத்து
என் காதுல கேட்டுட்டே இருக்கு
எனக்கு மீசை முளைச்ச நியாபகம் கூட வரல
திரும்பவும் நான் ஒரு குட்டி ஏழு வயசு
பையன் மாதிரி ஆனேன் அன்னைக்கு
அப்படி உங்கள யாராவது
ஒரு ஏழு வயசு பையன மாத்துனா
அவுங்கள என்னானு சொல்லுவீங்க Sir