Collection of Best Love Kavithai in Tamil Lyrics. Naal Ondru Vara Koodumo Tamil Lyrics. Tamil Kadhal Kavithaigal or Love Quotes in Tamil.
Collection of Best Love Kavithai in Tamil Lyrics. Naal Ondru Vara Koodumo Tamil Lyrics. Tamil Kadhal Kavithaigal or Love Quotes in Tamil.
Naal Ondru Vara Koodumo Tamil Lyrics
நாள் ஒன்று வரக்கூடுமோ
அதை எண்ணியே வாழ்க்கை ஓடுமோ
உன் தோள்களில் இடம் கிடைக்குமோ
அங்கு அன்பு கண்ணீர் தேங்குமோ
காலம் இருவருக்கும் பதில் சொல்லுமோ
இல்லையெனினும் காதல் அதிகரிக்குமோ
Love Kavithai Tamil Lyrics
நீ வெண்ணிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ
எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று எண்ணி
தானாக ஓடும் என் கால்கள்
இமைக்க மறந்த நொடிகளில் கூட
உனை நினைக்க மறந்ததில்லை
நீ தொலை தூரத்தில் அல்ல
என் விழி ஓரத்தில் இருப்பதால்
என் உயிரிலும் உயிராய் நீ
என் இதயத் துடிப்பாய் நீ
வானில் தோன்றும் நிலவாய் நீ
உன் பொன் சிரிப்பால்
மயங்கிப்போனேன் அடி
நீ என்னிடம் பேசும் நேரங்களில்
உன் கண்களை என்னிடம் காட்டாதே
பேச்சு மட்டுமல்ல சில நேரத்தில்
உன் மூச்சும் வர மறுக்கிறது அன்பே
நான் உன்னிடம் எதிர்பார்ப்பது
நீ எனக்காக செலவிடும்
அந்த சிறிய நேரத்தை மட்டுமே
இருக்கும் நொடியும்
இறக்கும் நொடியும்
உன்னோடு இருந்தால் போதும்
துடிக்கும் போதும்
தவிக்கும் போதும்
நீ என் அருகில் இருந்தால் போதும்
என் வாழ்க்கை சுகமாக
Tamil Kadhal Kavithaigal
எத்தனை முறை யோசித்தாலும்
ஞாபகத்திற்கு வர மறுக்கிறது
உன் மேல் காதல் பிறந்த
அந்த அழகிய வினாடி
பெண்ணே உன் விழிகள் பேசும்
மொழியின் அர்த்தம் புரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறேன் நான்
அதற்கான அகராதியையும்
நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்
உன்னை நினைக்காமல்
உறங்கிய நாட்களை விட
உன்னை நினைத்து
உறங்காத நாட்களே அதிகம்
உன் இதழ்களை போல்
உன் கண்களுக்கும்
பொய் சொல்ல கற்றுக்கொடு
அது உன் காதலை
காட்டிக்கொடுக்கிறது
விழிகளில் வெளிச்சமும் எனக்காக
செவிகளின் ஓசையும் எனக்காக
உதடுகளின் வார்த்தையும் எனக்காக
கைகள் ஓய்வதும் எனக்காக
கால்கள் தேய்வதும் எனக்காக
பின் ஏன் என் இதயம் மட்டும்
துடிக்கிறது உனக்காக
உன்னை நினைத்தபடியே
உறங்குகிறேன் நான் இரவில்
உறக்கம் நிரந்தரமானால்
இதயம் கடைசியாக நினைப்பது
நீயாக இருக்கட்டும்
Love Quotes in Tamil
காதல் என்ற கடலில் மூழ்கினேன்
என் முத்தாகிய உன்னை எடுக்க
உன் அன்பின் ஆழம் அதிகரிக்க
மூழ்கிக் கொண்டே இருக்கிறேன்
நீயோ கடமை என்னும் சிப்பிக்குள்
நானோ காதல் என்னும் கடலுக்குள்
நீயும் விடுவதாய் இல்லை
நானும் எழுவதாய் இல்லை
விடுதலையில்லா
சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க
பெண்ணே நீயோ எனை
நேசிக்கவே யோசிக்கிறாய்
ஆனால் நானோ உனை
நேசிக்கவே யாசிக்கிறேன்
நாற்புற சுவர்களுக்குள்
நடை பிணமாய் இன்று
எனை மீட்டு உயிர் கொடுக்கும்
நாள் தான் என்று
திக்கு தெரியாமல் காட்டில்
தொலைந்தேன் இன்று
நான் போகும் திசையை
காண்பதுதான் என்று
தன்னந்தனி தீவில் இன்று
கரைசேரும் நாள்தான் என்று
கரை சேர்த்தவன் நீ என்று
நான் கவிபாடும் நாள் என்று
இதயமாவது சிறிது
இடைவெளி விட்டு துடிக்கும்
ஆனால் உன் நினைவுகளோ
அந்த இடைவெளியை
தருவதில்லை எனக்கு
இருவரி கவிதையொன்று
இணைந்து எழுதிடுவோம்
நம் இதழ்களிலே